/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாளை சிறப்பு கிராம சபை கூட்டம்
/
நாளை சிறப்பு கிராம சபை கூட்டம்
ADDED : ஜூலை 09, 2025 10:18 PM
அன்னுார்; அன்னுார் ஊராட்சி ஒன்றியத்தில், 100 நாள் வேலை திட்டத்தில், கடந்த 2024 ஏப். 1 முதல் 2025 மார்ச் 31 வரை நடைபெற்ற பணிகள் குறித்த சமூக தணிக்கை வாரம் ஒரு ஊராட்சியில் நடக்கிறது.
நடப்பு வாரத்தில், அக்கரை செங்கப்பள்ளி ஊராட்சியில், சமூக தணிக்கை துவங்கியது. வட்டார வள அலுவலர் இம்மானுவேல் தலைமையிலான தணிக்கையாளர்கள், கடந்த ஆண்டு செய்யப்பட்ட பணிகளை கடந்த இரண்டு நாட்களாக அளவீடு செய்தனர். வேலை அட்டைகளை ஆய்வு செய்தனர்.
'சமூக தணிக்கையில் கண்டறியப்பட்ட ஆட்சேபனைகளை வாசிக்கும் சிறப்பு கிராம சபை கூட்டம் நாளை (11ம் தேதி) காலை 11:00 மணிக்கு, அக்கரை செங்கப்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெறும். 100 நாள் திட்ட தொழிலாளர்கள், பொதுமக்கள் பங்கேற்கலாம்,' என ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.