ADDED : ஏப் 04, 2025 03:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், சிறப்பு மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம், நாளை (ஏப்., 5ம் தேதி) நடக்கிறது.
மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
மின் நுகர்வோரிடம் இருந்து பெறப்படும் மின் கட்டணத் தொகை, மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின்வாரியம் தொடர்பான புகார்களையும் நிவர்த்தி செய்யும் வகையில், நாளை (ஏப்.,5ம் தேதி) காலை, 11:00 முதல் மாலை, 05:00 மணி வரை சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது. குனியமுத்துார், சோமனுார், நெகமம், ஒண்டிப்புதுார், சீரநாயக்கன்பாளையம் செயற்பொறியாளர் அலுவலகங்களில் நடக்கும் இம்முகாமில் பெறப்படும் புகார்கள் மீது உடனடி தீர்வு காணப்படும்.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

