/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எம்.எஸ்.எம்.இ., தொழில்களுக்கு சிறப்பு கடன் மேளா; 'டிக்' அழைப்பு
/
எம்.எஸ்.எம்.இ., தொழில்களுக்கு சிறப்பு கடன் மேளா; 'டிக்' அழைப்பு
எம்.எஸ்.எம்.இ., தொழில்களுக்கு சிறப்பு கடன் மேளா; 'டிக்' அழைப்பு
எம்.எஸ்.எம்.இ., தொழில்களுக்கு சிறப்பு கடன் மேளா; 'டிக்' அழைப்பு
ADDED : ஜூன் 11, 2025 06:45 AM
கோவை; தமிழக அரசு சார்பில் நடைபெறும், குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழாவில் பங்கேற்று பயனடைய, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (டிக்) அழைப்பு விடுத்துள்ளது. 'டிக்' மண்டல மேலாளர் பேபி, கிளை மேலாளர் சுஷ்மிதா ஆகியோர் கூறியதாவது:
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக, கோவை கிளை அலுவலகம், ஓசூர் சாலை, கொடிசியா கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு, எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு சிறப்பு தொழிற்கடன் விழா நடக்கிறது.
வரும் 30ம் தேதி வரை நடக்கும் முகாமில், தமிழக அரசு வழங்கி வரும் மானியங்கள், தமிழ்நாடு தொழில்முதலீட்டுக் கழகம் செயல்படுத்தி வரும் பல்வேறு கடன் வசதி திட்டங்கள், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (நீட்ஸ்), அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், 'கலைஞர் பசுமை ஆற்றல் திட்டம்' போன்ற சிறப்புத் திட்டங்கள் குறித்து, விரிவான விளக்கம் தரப்படுகிறது.
தகுதி வாய்ந்த தொழில்களுக்கு, தமிழக அரசின் முதலீட்டு மானியம் ரூ.1.5 கோடி வரை தரப்படுகிறது. ஏற்கனவே இயங்கி வரும் நிறுவனங்கள், விரிவாக்கம் செய்ய, நவீன இயந்திரங்கள் நிறுவும்பட்சத்தில், கூடுதலாக 5 சதவீத மானியமும் வழங்கப்படும்.
கடன் விண்ணப்பங்களுக்கு, ஆய்வுக் கட்டணத்தில் ஏற்கனவே 50 சதவீத சலுகை வழங்கப்பட்டு வந்தது. முகாமையொட்டி முழு விலக்கு அளிக்கப்படும். முகாமில் இதுவரை ரூ.8 கோடி மதிப்பிலான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் தகவலுக்கு, 0422-2380520, 94443 96849, 94450 23470 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.