sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

எம்.எஸ்.எம்.இ., தொழில்களுக்கு சிறப்பு கடன் மேளா; மானியம் உண்டு; கட்டணம் இல்லை: 'டிக்' அழைப்பு

/

எம்.எஸ்.எம்.இ., தொழில்களுக்கு சிறப்பு கடன் மேளா; மானியம் உண்டு; கட்டணம் இல்லை: 'டிக்' அழைப்பு

எம்.எஸ்.எம்.இ., தொழில்களுக்கு சிறப்பு கடன் மேளா; மானியம் உண்டு; கட்டணம் இல்லை: 'டிக்' அழைப்பு

எம்.எஸ்.எம்.இ., தொழில்களுக்கு சிறப்பு கடன் மேளா; மானியம் உண்டு; கட்டணம் இல்லை: 'டிக்' அழைப்பு


ADDED : ஜூன் 12, 2025 10:23 PM

Google News

ADDED : ஜூன் 12, 2025 10:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; தமிழக அரசு சார்பில் நடைபெறும், குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழாவில் பங்கேற்று பயனடைய, தமிழ்நாடு தொழில்முதலீட்டுக் கழகம் (டிக்) அழைப்பு விடுத்துள்ளது.

'டிக்' மண்டல மேலாளர் பேபி, கிளை மேலாளர் சுஷ்மிதா ஆகியோர் கூறியதாவது:

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக, கோவை கிளை அலுவலகம், ஹுசூர் சாலை, கொடிசியா கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு, எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு சிறப்பு தொழிற்கடன் விழா நடக்கிறது.

வரும் 30ம் தேதி வரை நடக்கும் இச்சிறப்பு முகாமில், தமிழக அரசு வழங்கி வரும் மானியங்கள், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் செயல்படுத்தி வரும் பல்வேறு கடன் வசதி திட்டங்கள், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (நீட்ஸ்), அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், 'கலைஞர் பசுமை ஆற்றல் திட்டம்' போன்ற சிறப்புத் திட்டங்கள் குறித்து விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது.

தகுதி வாய்ந்த தொழில்களுக்கு தமிழக அரசின் முதலீட்டு மானியம் ரூ.1.5 கோடி வரை தரப்படுகிறது. மேலும், ஏற்கனவே இயங்கி வரும் நிறுவனங்கள், தங்கள் உற்பத்தியை மேம்படுத்தும் பொருட்டு விரிவாக்கம் செய்ய, நவீன இயந்திரங்கள் நிறுவும்பட்சத்தில், கூடுதலாக 5 சதவீத மானியமும் வழங்கப்படும்.

கட்டணம் இல்லை


கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வுக் கட்டணத்தில் ஏற்கனவே 50 சதவீத சலுகை வழங்கப்பட்டு வந்தது. தற்போது முகாமையொட்டி ஆய்வுக்கட்டணத்தில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படும். இந்த வாய்ப்பை எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள், புதிய தொழில்முனைவோர் பயன்படுத்திக் கொண்டு, மத்திய, மாநில அரசின் மானிய சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சிறப்பு முகாமில் இதுவரை ரூ.8 கோடி மதிப்பிலான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவை பரிசீலிக்கப்பட்டு, உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மேலும் தகவலுக்கு 0422-2380520, 94443 96849, 94450 23470 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us