/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விநாயகர்,அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை சிறப்பு வழிபாடு
/
விநாயகர்,அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை சிறப்பு வழிபாடு
விநாயகர்,அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை சிறப்பு வழிபாடு
விநாயகர்,அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை சிறப்பு வழிபாடு
ADDED : நவ 30, 2024 04:32 AM

அன்னுார் : நஞ்சுண்ட விநாயகர் கோவிலில், மண்டல பூஜை விழாவில், கரும்பு அலங்காரத்தில் விநாயகர் அருள் பாலித்தார்.
அன்னுார் தென்னம்பாளையம் சாலையில் உள்ள நஞ்சுண்ட விநாயகர் மற்றும் அய்யப்பன் கோவிலில், பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்த 14ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து, 15ம் தேதி முதல் மண்டல பூஜை நடந்து வருகிறது. டிச., 8ம் தேதி மண்டல பூஜை நிறைவு விழா நடக்கிறது.
அன்றைய தினம், சிறப்பு வேள்வி பூஜை நடக்கிறது. முக்கிய வீதிகளின் வழியாக, ஜமாப் இசை, செண்டை மேளம் மற்றும் வாண வேடிக்கையுடன், அய்யப்ப சுவாமி திருவீதி உலா மற்றும் அன்னதானம் நடக்கிறது.
மண்டல பூஜையை முன்னிட்டு, நேற்று நஞ்சுண்ட விநாயகர் கரும்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். ஸ்ரீ அய்யப்ப சுவாமி சிறப்பு மலர் அலங்காரத்தில் அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.