/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
/
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
ADDED : நவ 08, 2024 11:20 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் நடந்த, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில், 217 பேர் பங்கேற்றனர்.
பொள்ளாச்சி தெற்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கானசிறப்பு மருத்துவ முகாம், பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
தலைமையாசிரியர் வடிவேல் முருகன் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் குளோரி ஸ்டெல்லா, தெற்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் காயத்ரி, ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இம்முகாமில், கண், காது, கை, கால் குறைப்பாடு, அறிவுசார் குறைப்பாடு உடைய, 217 மாற்றுத்திறனாளிகள் பயன்பெற்றனர்.
பல்வேறு துறை சார்ந்த டாக்டர்கள் மாணவர்களை பரிசோதித்து உரிய மருத்துவச்சான்றிதழ்களை வழங்கினார். இம்முகாமில், 82 பேருக்கு புதிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. இம்முகாமிற்கான சிறப்பு பயிற்றுநர்கள் ஒருங்கிணைத்தனர்.