மாற்றுத்திறன் மாணவர்களுக்கு நடந்த சிறப்பு மருத்துவ முகாம்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு நடந்த சிறப்பு மருத்துவ முகாம்
ADDED : டிச 13, 2025 06:33 AM

பெ.நா.பாளையம்: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம், கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் வளாகத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடந்தது.
பெரியநாயக்கன்பாளையம் வட்டார வள மையம், வட்டார மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் நடந்த முகாமை, மாநகராட்சி கவுன்சிலர் கிருஷ்ணன் துவக்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர்கள் ராஜேந்திரன், ராஜம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனை மருத்துவர்கள், 125 மாற்று திறன் குழந்தைகளுக்கு யூ.டி.ஐ.டி., கார்டு பதிவு, உதவி உபகரணங்கள், இலவச அறுவை சிகிச்சை பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
இலவச பஸ் பாஸ் சலுகை, முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான பதிவுகளை சிறப்பு கல்வி ஆசிரியர்கள், பிசியோதெரபிஸ்டுகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்டனர். ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏஞ்சல், அடையாள அட்டைகளை வழங்கினார்.
முகாம் ஏற்பாடுகளை, பெரியநாயக்கன்பாளையம் வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர் நித்யா ராஜகோபால் தலைமையில், சிறப்பு கல்வி ஆசிரியர்கள் தேன்மொழி, ஆர்த்தி, சுமத்திரா, சித்ரா ஆகியோர் ஏற்பாடுசெய்து இருந்தனர்.
