/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பா.ஜ.,சார்பில் ரத்தினபுரியில் மருத்துவ சிறப்பு முகாம்
/
பா.ஜ.,சார்பில் ரத்தினபுரியில் மருத்துவ சிறப்பு முகாம்
பா.ஜ.,சார்பில் ரத்தினபுரியில் மருத்துவ சிறப்பு முகாம்
பா.ஜ.,சார்பில் ரத்தினபுரியில் மருத்துவ சிறப்பு முகாம்
ADDED : ஜூலை 27, 2025 11:59 PM
கோவை; பா.ஜ., மருத்துவ பிரிவு சார்பில், ரத்தினபுரி மண்டலில் மருத்துவ முகாம் நடந்தது.
முகாமை, மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் துவங்கி வைத்தார். மருத்துவ பிரிவு மாவட்ட தலைவர் சுரேந்திரன், மாநிலச் செயலாளர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், இ.சி.ஜி., கண் மற்றும் பல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ரத்தத்தில் சர்க்கரை அதிகம் உள்ளவர்களுக்கு, தனி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு உணவு உட்கொள்ளும் நடைமுறைகள் கற்றுக்கொடுக்கப்பட்டன.
அதோடு மாத்திரைகள், இன்சுலின், வைட்டமின் மருந்துகள் வழங்கப்பட்டன. அறுவைசிகிச்சை செய்யும் சூழலில் இருப்பவர்கள், ஆலோசனை வழங்கி மருத்துவம னைக்கு பரிந்துரைசெய்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
மண்டல் தலைவர் அர்ஜுனன், மருத்துவ முகாம் பொறுப்பாளர் வேல்முருகன் , மாவட்ட செயலாளர் சரஸ்வதி, மண்டல் பொதுச் செயலாளர் ஸ்ரீ ராம் பிரபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.