/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறப்பு மருத்துவ முகாம்; பொதுமக்களுக்கு சிகிச்சை
/
சிறப்பு மருத்துவ முகாம்; பொதுமக்களுக்கு சிகிச்சை
ADDED : அக் 30, 2024 08:13 PM

வால்பாறை; தமிழ்நாடு அரசு பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில், கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ், வால்பாறையில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த முகாமை, நகராட்சித்தலைவர் அழகுசுந்தரவள்ளி, தி.மு.க., நகர செயலாளர் சுதாகர், நகராட்சி துணைத்தலைவர் செந்தில் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
முகாமில், ரத்தசோகை, வைட்டமின் குறைபாடுகள், காய்ச்சல், நீரிழிவு நோய், இரைப்பை மற்றும் குடல் நோய், காது, மூக்கு, தொண்டை, கண் உள்ளிட்ட அனைத்து வகையான நோய்களுக்கும் டாக்டர் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
வால்பாறை நகர் மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதியைச்சேர்ந்த மக்கள், முகாமில் கலந்து கொண்டு, சிகிச்சை பெற்றனர். முகாமிற்கான ஏற்பாடுகளை, வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், செவிலியர்கள், மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் செய்திருந்தனர்.