/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள்
/
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள்
ADDED : நவ 11, 2025 12:54 AM
கோவை: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் 15 வட்டாரங்களில், வரும் 18 முதல் டிச. 18 வரை நடைபெறவுள்ளன.
மாவட்டத்தில் 18 வயது வரை உள்ள சுமார் 3,500 மாற்றுத்திறன் மாணவர்கள் இல்லவழி பயிற்சி, பகல் நேர பாதுகாப்பு மையம் மற்றும் பள்ளிகளில் உள்ளடங்கிய கல்வி திட்டத்தின் கீழ் பயின்று வருகின்றனர்.
இவர்களின் மருத்துவ தேவைகள் மற்றும் நலனை உறுதி செய்வதற்காக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து, மாவட்ட பள்ளிக்கல்வி மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் சார்பில் இம்முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கு மருத்துவ சேவைகள் எளிதாக கிடைக்க வட்டாரத்திற்கு ஒரு பள்ளி என தேர்வு செய்து முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
அதன் படி, பேரூர் வட்டாரத்தில் நவ. 18ல் குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, கோவை நகரம் நவ. 20ல் டாடாபாத் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, சுல்தான்பேட்டை நவ. 25ல் அரசு உயர்நிலைப்பள்ளி, அன்னூர் நவ. 26ல் அமரர் எ.முத்துகவுண்டர் அரசு மேல்நிலைப்பள்ளி, கிணத்துக்கடவு நவ. 27ல் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட அனைத்து வட்டாரங்களிலும் டிசம்பர் 18ம் தேதி வரை முகாம்கள் நடைபெறும்.
இந்த முகாம்களில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ பரிசோதனை, மாற்றுத்திறனாளர் தேசிய அடையாள அட்டை பதிவு, தனித்துவ அடையாள அட்டை, ஆதார் பதிவு, புதிய பஸ் மற்றும் ரயில் பாஸ் விண்ணப்பம், உபகரணங்கள் மற்றும் உதவித்தொகைக்கு விண்ணப்பம், அறுவை சிகிச்சை மற்றும் பரிசோதனைக்கான மருத்துவ பரிந்துரை கடிதம் ஆகிய பல்வேறு சேவைகள் வழங்கப்படவுள்ளன.

