/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அதிக பீட்டா கரோட்டீன் மக்காச்சோள வயல் விழா
/
அதிக பீட்டா கரோட்டீன் மக்காச்சோள வயல் விழா
ADDED : நவ 11, 2025 12:54 AM
கோவை: கோவை, வேளாண் பல்கலை சார்பில், அதிக பீட்டா கரோட்டீன் கொண்ட மக்காச்சோள ரகத்தின் வயல் விழா நடந்தது.
தமிழ்நாடு வேளாண் பல்கலையின் உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப மையம் மற்றும் சிறுதானியங்கள் துறை இணைந்து, 'சி.எம்.பி.எச்., 19011- கோ 6 ப்ரோ விட்' என்ற புதிய வீரிய ஒட்டு ரக மக்காச்சோளத்தை உருவாக்கின. இந்த ரக மக்காச்சோள வயல்விழா, சின்ன சேலம் மேல்நாரியப்பனூரில் நடந்தது. விழாவுக்கு சிறுதானியங்கள் துறைத் தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார்.
காக்ஸ்பிட் இயக்குநர் செந்தில் பேசுகையில், “இந்த ரகத்தில் அதிக பீட்டா கரோட்டீன் சத்து உள்ளது. நல்ல விளைச்சல் திறன் கொண்டது. இந்த அதிக பீட்டா கரோட்டீன் ரகம் குழந்தைகளிடம் வைட்டமின் ஏ சத்து குறைபாட்டைச் சரி செய்ய உதவும். இந்த ரகத்தில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் சந்தையில் நல்ல மதிப்பைப் பெறும்,” என்றார்.
சுற்றுப்பகுதி விவசாயிகள் பங்கேற்று, புதிய ரக மக்காச்சோளம் பற்றி ஆர்வமாக கேட்டறிந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண் உதவி இயக்குநர் பிரபாவதி, வேளஆண் அலுவலர் ராஜ்குமார், வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி விமலாராணி உட்பட பலர் பங்கேற்றனர்.

