ADDED : அக் 26, 2025 07:41 PM
அ நிறம் | அளவு
கோவை: கோவை மாநகராட்சியில் உள்ள, 100 வார்டுகளிலும் சிறப்பு வார்டு கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
இன்று, நாளை மற்றும், 29ம் தேதி என மூன்று நாட்களும் சிறப்பு கூட்டங்கள், அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் தலைமையில் நடத்தப்படும். முதல் நாளான இன்று, 38 வார்டுகளில் கூட்டம் நடத்தப்படுகிறது. நாளை 25 வார்டுகளிலும், 29ம் தேதி 37 வார்டுகளிலும் நடைபெற உள்ளது.
