/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கங்கா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
/
கங்கா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED : ஜன 28, 2024 11:13 PM

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, அரசம்பாளையத்தில் உள்ள, கங்கா பரமேஸ்வரி வீரபத்திர கோவிலில், நேற்று இஷ்ட லிங்க பூஜை நடந்தது.
கிணத்துக்கடவுக்கு உட்பட்ட அரசம்பாளையம் ஊராட்சியில் உள்ள கங்கா பரமேஸ்வரி வீரபத்திர கோவிலில் நேற்று, ஆயிரத்து எட்டு காசி ஜகத்குரு இஷ்ட லிங்க மகா பூஜை நடந்தது. இந்த பூஜையை, சந்திரசேகர் சிவாச்சாரிய சுவாமி நடத்தினார்.
இந்த பூஜையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும், கங்காபரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.
இதில், அரசம்பாளையம் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர்.