/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு பூஜை
/
புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு பூஜை
ADDED : அக் 12, 2025 10:30 PM

- நிருபர் குழு -
பொள்ளாச்சி, உடுமலை சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.* பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
* டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில், சிறப்பு ேஹாமம், அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் தாயாருடன், பெருமாள் அருள்பாலித்தார்.
* ஆனைமலை அருகே, ரமணமுதலிபுதுார் வெங்கட்ரமண பெருமாள் கோவிலில், சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
*ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில் காலையில் சுவாமிக்கு திருமஞ்சனம், அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது.
உடுமலை உடுமலை திருமூர்த்திமலை கரிவரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர், பூமி நீளாநாயகி சமேதராக, கரிவரதராஜ பெருமாள் சுவாமி கோவில் உலா நடைபெற்றது.
உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கரட்டுமடம் சஞ்சீவராய பெருமாள் கோவில், ஜல்லிபட்டி திருமலைராய பெருமாள் கோவில், அடிவள்ளி ஸ்ரீ வேங்கடேச பெருமாள், கொங்கல்நகரம் ஸ்ரீ ஹரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
உடுமலை ஏழுமலையான் கோவிலில், புரட்டாசி நான்காவது சனிக்கிழமையையொட்டி, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.