/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அ.தி.மு.க. ஆட்சி அமைய கோவிலில் சிறப்பு வழிபாடு
/
அ.தி.மு.க. ஆட்சி அமைய கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED : ஆக 24, 2025 11:28 PM

பொள்ளாச்சி; 'அ.தி.மு.க. ஆட்சி அமைத்து, முதல்வராக பழனிசாமி பதவியேற்க வேண்டும்,' என அ.தி.மு.க.வினர், பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்தனர்.
கோவை புறநகர் தெற்கு மாவட்ட ஜெ. பேரவை சார்பில், சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று, மீண்டும் முதல்வராக பழனிசாமி பதவியேற்க வேண்டி, பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். நகர செயலாளர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன், சுவாமி தரிசனம் செய்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். தொடர்ந்து துண்டு பிரசுரங்களை வினியோகித்து, அ.தி.மு.க. ஆட்சியில், 10 ஆண்டு கால சாதனைகள், தி.மு.க. அரசின், நான்கரை ஆண்டு காலத்தில் ஏற்பட்ட இன்னல்களை விளக்கி திண்ணை பிரசாரம் செய்தார்.
மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ரகுபதி, மாவட்ட ஜெ. பேரவை துணை செயலாளர் மாரிமுத்து, கவுன்சிலர் ஜேம்ஸ்ராஜா, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் முருகன், நிர்வாகிகள் கனகராஜ், அருணாச்சலம் மற்றும் பா.ஜ., த.மா.கா. நிர்வாகிகள் பங்கேற்றனர்.