/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேதா தட்சிணாமூர்த்தி சன்னதியில் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை
/
மேதா தட்சிணாமூர்த்தி சன்னதியில் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை
மேதா தட்சிணாமூர்த்தி சன்னதியில் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை
மேதா தட்சிணாமூர்த்தி சன்னதியில் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை
ADDED : மே 12, 2025 12:16 AM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே டீச்சர்ஸ் காலனி பகுதியில் உள்ள ராஜ அஷ்ட விமோசன மஹா கணபதி கோவிலில், மேதா தட்சிணாமூர்த்தி சன்னதியில், குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு வைபவம் நடந்தது.
இதில் விஸ்வக்சேனர், லட்சுமி நாராயண பூஜையுடன் தொடங்கிய நிகழ்ச்சியில், கலச பஞ்ச சுத்த ஹோமம், நவக்கிரக ஹோமம், மகா கணபதி ஹோமம், 12 ராசிக்கான ஹோமம் நடந்தன. மேதா தட்சிணாமூர்த்தி சன்னதி மூலவருக்கு தேன், பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா கலச அபிஷேகமும் நடந்தது. நிறைவாக மங்கள ஆரத்தி அஷ்டோத்திரம் சேவிக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் மேற்கொண்டிருந்தனர்.