/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீபாவளியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை
/
தீபாவளியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை
ADDED : அக் 21, 2025 12:40 AM

-நமது நிருபர்---- குழு- தீபாவளி பண்டிகையை ஒட்டி கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி, சூலூர் வட்டாரத்தில் உள்ள வைத்தீஸ்வரன் கோவில், கணபதீஸ்வரர் கோவில், திருவேங்கட நாத பெருமாள் கோவில், கரவழி மாதப்பூர் ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோவில், அப்பநாயக்கன் பட்டி சக்தி மாரியம்மன் கோவில், கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் நேற்று அதிகாலை சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது.
சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு, சுவாமி அருள்பாலித்தார். புத்தாடை அணிந்து பக்தர்கள் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. வழிபாடு முடிந்து பக்தர்கள் பட்டாசுகள் வெடித்து தீபாவளியை உற்சாகத்துடன் கொண்டாடினர்.
அன்னூர் அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் மன்னீஸ்வரருக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மன்னீஸ்வரரை வழிபட்டனர். பலரும் புத்தாடை அணிந்து கோவிலுக்கு வந்திருந்தனர். அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில், பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
கணேசபுரம் விளையாட்டு மாரியம்மன் கோவில், குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசுவாமி கோவில், கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் கோவில், கவைய காளியம்மன் கோவில், குரும்பபாளையம் வாத பிள்ளையார் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தன. சிறப்பு வழிபாடு நடந்தது.
பெ.நா.பாளையம் பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவில்களில் அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதே போல பாலமலை ரங்கநாதர் கோவில், சின்னதடாகம் கரிவரதராஜ பெருமாள் கோவில், இடிகரை பள்ளிகொண்டா ரங்கநாதர் கோவில், உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர்.
பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பழைய புதூர் ஆதிமூர்த்தி பெருமாள் கோவிலில் பூதேவி, ஸ்ரீதேவி உடன் பெருமாள் வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சிறப்பு பஜனை நடந்தது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.