தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரம்ஜான் சிறப்பு தொழுகை :பல ஆயிரம் பேர் பங்கேற்பு

 ரம்ஜான் சிறப்பு தொழுகை :பல ஆயிரம் பேர் பங்கேற்பு

 ரம்ஜான் சிறப்பு தொழுகை :பல ஆயிரம் பேர் பங்கேற்பு


ADDED : மார் 21, 2026 07:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2026 07:09 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடத்தினர்.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு குனியமுத்துார் ஆயிஷா மஹால், கரும்புக்கடை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மைதானம், பூமார்க்கெட்டில் உள்ள ஹைதர் அலி திப்பு சுல்தான் பள்ளி வாசல் மற்றும் கோவையில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகை நேற்று நடந்தது.

புதிய பிறை தென்பட்டதை தொடர்ந்து, பல ஆயிரம் இஸ்லாமியர் இந்த சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர்.

கரும்புக்கடை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவைக் கிளை சார்பில், இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மைதானத்தில் நடந்த சிறப்பு தொழுகை நிகழ்ச்சியில், பல ஆயிரம் பேர் பங்கேற்றனர். நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்.

சிறப்பு தொழுகையை துவக்கி வைத்த மவுலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி கூறுகையில், ''உலகம் முழுவதும் போர் சூழல் ஏற்பட்டுள்ளது. எல்லோரும் அமைதியை பற்றி பேசுகின்றனர். நீதியை பற்றி பேசுவதில்லை. நீதி நிலைத்து இருந்தால்தான் உலகில் அமைதி ஏற்படும். அதனால் முதலில் நீதிக்கு குரல் கொடுக்க வேண்டும். இந்த நன்நாளில் நீதிக்காகவும், அமைதிக்காகவும் ஒருங்கிணைந்து தொழுவோம்,'' என்றார்.

சிறப்பு தொழுகைக்கு கோவை மாவட்ட தலைவர் ஜனாப் உமர் பாரூக் தலைமை வகித்தார். அப்துல் ஹக்கீம் ஒருங்கிணைந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us