/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சொத்து வரி புத்தகம் வழங்க சிறப்பு தீர்மானம் நிறைவேற்றம்
/
சொத்து வரி புத்தகம் வழங்க சிறப்பு தீர்மானம் நிறைவேற்றம்
சொத்து வரி புத்தகம் வழங்க சிறப்பு தீர்மானம் நிறைவேற்றம்
சொத்து வரி புத்தகம் வழங்க சிறப்பு தீர்மானம் நிறைவேற்றம்
ADDED : மார் 29, 2025 06:26 AM
கோவை : கோவை மாநகராட்சி கூட்டத்தில், மேயர் பேசியதாவது;
புதிய குடிநீர் இணைப்பு வழங்க, அந்தந்த மண்டல அலுவலகங்களில் விண்ணப்பம் பெற்று பதிவு செய்த பின்னரே, புதிய இணைப்பு வழங்க வேண்டும்.
இனி வரும் நாட்களில் குப்பை வரி விதிக்கும்போது, சரியான முறையில் அளவீடு செய்ய வேண்டும். தவறாக விதித்திருந்தால், பொதுமக்கள் கொடுக்கும் புகார் அடிப்படையில், மறு ஆய்வு செய்த பிறகே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீட்டு வரி புத்தகத்தில் தவறு இருந்தால், தக்க ஆதாரத்துடன் நிரூபிக்கும் பட்சத்தில், கம்ப்யூட்டரில் திருத்தம் செய்து கொடுக்க வேண்டும்.
புதிதாக சொத்து வரி விதிக்கும்போது, அட்டை வடிவில் வழங்கப்படுகிறது. பழைய முறையில் புத்தக வடிவில் கொடுத்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
இவ்வாறு, பேசினார்.