/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு கலைக் கல்லுாரியில் சிறப்பு பிரிவு கலந்தாய்வு
/
அரசு கலைக் கல்லுாரியில் சிறப்பு பிரிவு கலந்தாய்வு
ADDED : ஆக 11, 2025 11:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை அரசு கலைக் கல்லுாரியில், 20 முதுகலை பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. 557 இடங்கள் உள்ளன. இவ்விடங்களுக்கு, 6,514 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்கான தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது.
மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நேற்று துவங்கியது. முதற்கட்டமாக சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது. இதில் விளையாட்டு, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகள், என்.சி.சி., உள்ளிட்டவற்றுக்கான, 45 இடங்களில், 25 இடங்கள் நிரம்பின.
பொதுக்கலந்தாய்வு, நாளை துவங்க உள்ளது. முதுகலை மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள், வரும் 20 முதல் துவங்க உள்ளது.