/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு விளக்கம்
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு விளக்கம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு விளக்கம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு விளக்கம்
ADDED : நவ 03, 2025 11:39 PM

சூலூர்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஓட்டு சாவடி முகவர்களுக்கு அதிகாரிகள் விளக்கினர்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் துவங்கியுள்ளது. இதையொட்டி, சூலூர் சட்டசபை தொகுதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஓட்டு சாவடி முகவர்களுக்கு, தீவிர திருத்தம் குறித்து விளக்கும் கூட்டம் சூலூர் ஆர்.வி.எஸ்., கலை அறிவியல் கல்லூரியில் நேற்று நடந்தது. உதவி தேர்தல் அலுவலர் செந்தில்குமார், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் அம்பிகா ஆகியோர் பங்கேற்றனர்.
சூலூர் தொகுதி தேர்தல் அலுவலர் ஜெகநாதன் பேசியதாவது:
சிறப்பு தீவிர திருத்தப்பணியில் முக்கியமாக, இறந்த வாக்காளர்களின் பெயர்களை கண்டறிந்து நீக்குவது, இரு முறை பதிவாகியுள்ள பெயர்களை கண்டறிதல், இடம்பெயர்ந்த வாக்காளர்களை கண்டறில் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
ஓட்டு சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று இரு கணக்கெடுப்பு படிவங்களை வழங்குவார்கள். வாக்காளர்கள் படிவங்களை நிரப்பி அவர்களிடம் வழங்க வேண்டும்.
படிவத்தை பெற்றுக்கொண்டதற்கான அத்தாட்சியாக, ஒரு படிவத்தை வாக்காளரிடம் வழங்கிவிடுவர். அலுவலர்கள் மூன்று முறை வீடுகளுக்கு செல்வர். பெறப்பட்ட படிவங்கள் பதிவேற்றம் செய்யப்படும். அதன்பின், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதன்பிறகு, ஆட்சேபனைகள், உரிமை கோரல், மறுப்புரைகள் பரிசீலிக்கப்படும். கட்சி முகவர்கள், அதிகபட்சமாக, 50 படிவங்கள் வரை மொத்தமாக வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான உறுதிமொழியை முகவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, கட்சி முகவர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

