/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போக்சோ வழக்கில் தலைமறைவு நபரை பிடிக்க சிறப்பு தனிப்படை
/
போக்சோ வழக்கில் தலைமறைவு நபரை பிடிக்க சிறப்பு தனிப்படை
போக்சோ வழக்கில் தலைமறைவு நபரை பிடிக்க சிறப்பு தனிப்படை
போக்சோ வழக்கில் தலைமறைவு நபரை பிடிக்க சிறப்பு தனிப்படை
ADDED : ஜூலை 13, 2025 05:47 AM
கோவை : போக்சோ வழக்கில் தலைமறைவு நபரை பிடிக்க, சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கோவை, தெற்கு உக்கடத்தை சேர்ந்தவர் ரிஸ்வான்,32; போக்சோ வழக்கில் கைதான இவர் மீது, கோவை முதன்மை போக்சோ கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், கோர்ட்டிற்குள் தேசிய கொடியுடன் புகுந்து அவர், பிளேடை விழுங்கி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார்.
பின்னர் அங்கிருந்து தப்பி ஓடினார். அவர் மீது, கடந்த 4 ம்தேதி தீர்ப்பு அளிக்கப்பட இருந்த நிலையில், கோர்ட்டில் ஆஜராகாததால் 'பிடிவாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது. ஆனால், போலீசில் சிக்காமல் தலைமறைவாக உள்ளார். வரும் 17ம் தேதிக்குள் அவரை பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்த சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.