/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேட்டை கும்பலை தடுக்க சிறப்பு குழுவினர் தீவிர ரோந்து
/
வேட்டை கும்பலை தடுக்க சிறப்பு குழுவினர் தீவிர ரோந்து
வேட்டை கும்பலை தடுக்க சிறப்பு குழுவினர் தீவிர ரோந்து
வேட்டை கும்பலை தடுக்க சிறப்பு குழுவினர் தீவிர ரோந்து
ADDED : நவ 07, 2025 09:16 PM

மேட்டுப்பாளையம்: காரமடை வனப்பகுதிகளில், புலி வேட்டை கும்பலை தடுக்க முள்ளி வனப்பகுதியில் சிறப்பு குழுவினர் துப்பாக்கியுடன் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கேரளா எல்லை மற்றும் நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில், புலிகளை வேட்டையாடும் கும்பல்கள் நடமாட்டத்தை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதன் ஒருபகுதியாக கேரளா மாநிலம் எல்லையில் உள்ள காரமடை வனப்பகுதிகளில் எஸ்.டி.எப்., என சொல்லக்கூடிய சிறப்பு அதிரடிப் படை மற்றும் வனத்துறையினர் அடங்கிய சிறப்பு குழுவினர், துப்பாக்கிகளுடன் அடர் வனத்தில் தீவிர ரோந்து மேற்கொண்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, காரமடை வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறியதாவது:-
முள்ளியில் உள்ள வனச்சோதனைச்சாவடியில் போலீசார் மற்றும் வனத்துறையினர், பகல் இரவு என தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், அத்திக்கடவு, பில்லூர், மேல்பாவி, குண்டூர், ஆலங்கண்டி, ஆலங்கட்டிபுதூர், காலன்புதூர், செங்குட்டை, குட்டை புதூர், பட்டி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வனத்துறையினர் தொடர் ரோந்து செல்கின்றனர். அடர் வனத்தில் சிறப்பு குழுவினர் துப்பாக்கிகளுடன், வனத்துறையினருடன் இணைந்து 15 கி.மீட்டர் துாரம் வரை அடர் வனப்பகுதிக்குள் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் வேட்டை கும்பல்கள் நடமாட்டம் தடுக்கப்பட்டுள்ளது.அதே போல் கள்ளச்சாராயம் காய்ச்சுவது, விற்பனை செய்வதும் தடுக்கப்பட்டுள்ளது.
ஊருக்குள் வனவிலங்குகள் வராமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று வேட்டை கும்பல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

