தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ போத்தனுார் - பரூணி இடையே சிறப்பு ரயில்

போத்தனுார் - பரூணி இடையே சிறப்பு ரயில்

போத்தனுார் - பரூணி இடையே சிறப்பு ரயில்


ADDED : ஏப் 19, 2025 11:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2025 11:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோடை விடுமுறை கூட்டநெரிசலை தவிர்க்க, போத்தனுார் - பரூணி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி, போத்தனுார் - பரூணி(06055) சிறப்பு ரயில், வரும், 26, மே, 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் போத்தனுாரில் இருந்து, காலை 11:50 மணிக்கு புறப்பட்டு, மூன்றாம் நாள் மதியம், 2:30 மணிக்கு பரூணி சென்றடையும்.

மறுமார்க்கத்தில், பரூணி - போத்தனுார் சிறப்பு ரயில், வரும், 29, மே, 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் பரூணியில் இருந்து இரவு 11:45 மணிக்கு புறப்பட்டு, நான்காம் நாள் அதிகாலை 3:45 மணிக்கு போத்தனுார் வந்தடையும்.

இரண்டு, ஏ.சி., மூன்றடுக்கு, 14, படுக்கை வசதி, நான்கு இரண்டாம் வகுப்பு, இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

சிறப்பு ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், கூடுர், நெல்லுார், ஓங்கல், விஜயவாடா, பரூ, ராஜமுந்திரி, ராஞ்சி உள்ளிட்ட பல்வேறு ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும். சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு, நேற்று துவங்கியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us