ADDED : ஏப் 13, 2026 01:01 AM
அ நிறம் | அளவு
கோவை: பயணிகள் வசதிக்காக போத்தனுார்-பரூணி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. போத்தனுாரில் இருந்து இன்று முதல் வரும் 27ம் தேதி வரை திங்கள்தோறும் அதிகாலை 4:30க்கு புறப்படும் ரயில்(06021) புதன் காலை 10:30க்கு பீஹார் மாநிலம் பரூணி அடைகிறது.
பரூணியில் இருந்து வரும் 16 முதல் 30ம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. வியாழன் தோறும் மதியம் 1:15க்கு புறப்படும் ரயில்(06022) சனிக் கிழமை இரவு 11:30க்கு போத்தனுார் வந்தடையும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
