/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காசி தமிழ் சங்கமம் முன்னிட்டு சிறப்பு ரயில்; பயணிகள் மகிழ்ச்சி
/
காசி தமிழ் சங்கமம் முன்னிட்டு சிறப்பு ரயில்; பயணிகள் மகிழ்ச்சி
காசி தமிழ் சங்கமம் முன்னிட்டு சிறப்பு ரயில்; பயணிகள் மகிழ்ச்சி
காசி தமிழ் சங்கமம் முன்னிட்டு சிறப்பு ரயில்; பயணிகள் மகிழ்ச்சி
ADDED : பிப் 16, 2025 11:56 PM

கோவை; காசி தமிழ் சங்கமத்தை முன்னிட்டு, நேற்று இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில், ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர்.
காசி தமிழ் சங்கமத்தின் மூன்றாம் பதிப்பு, நேற்று முன்தினம் துவங்கியது. உத்திரபிரதேசத்தின் வாரணாசியில், 10 நாட்கள் நடக்கும் இந்நிகழ்ச்சிக்கு செல்ல, கோவை - பனாரஸ் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
அதன்படி, கோவை - பனாரஸ்(06187) சிறப்பு ரயில், கோவையிலிருந்து நேற்று காலை 6:35 மணிக்கு புறப்பட்டது. சிறப்பு ரயில், நாளை காலை 7:15 மணிக்கு பனாரஸ் சென்றடையும். கோவையிலிருந்து நேற்று புறப்பட்ட ரயிலில், 91 பயணிகள் மகிழ்ச்சியுடன் புறப்பட்டனர். சேலம் கோட்ட உதவி ரயில்வே மேலாளர் சிவலிங்கம், கொடி அசைத்து ரயிலை துவக்கி வைத்தார். கோவை ரயில்வே ஸ்டேஷன் இயக்குனர் சச்சின்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.