/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம்
/
மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம்
ADDED : மே 22, 2025 12:34 AM
கோவை; தமிழக அரசு பள்ளிகளில் கல்வி பயின்ற, பிளஸ் 1 முடித்த மாணவ,- மாணவிகளின் திறனை மேம்படுத்தும் நோக்கில், மாநில அளவிலான 5 நாள் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.
தமிழக அரசு, 2023 -- 2024ம் கல்வியாண்டில், பள்ளி மாணவர்களின் திறனை கண்டறிந்து ஊக்குவிக்கும் வகையில், திறன் தேடல் தேர்வு அறிமுகப்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, 2024 -- 2025ம் கல்வியாண்டுக்கான தேர்வும், அண்மையில் நடைபெற்று முடிந்தது.
மாநிலம் முழுவதும் தேர்ச்சி பெற்ற, தற்போது பிளஸ் 1 முடித்த, 1,000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சி முகாம், வரும் 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை, கோவை மாவட்டம் காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழக வளாகத்தில், உண்டு உறைவிட முகாமாக நடைபெறுகிறது.