/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகை செய்தலுக்கு சிறப்பு பயிற்சி
/
நகை செய்தலுக்கு சிறப்பு பயிற்சி
ADDED : ஆக 01, 2025 09:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; நகை செய்தலுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான, ஒரு வார கால பயிற்சி, மாவட்ட தொழில் மையத்தில் நடந்து வருகிறது.
கோல்ட் ஸ்மித் அகாடமி சார்பில், மெழுகு அச்சு செய்தல், நகை செய்தல், நகையில் கல் பதிப்பது உட்பட அடிப்படை பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. 34 பேர் பங்கேற்றுள்ளனர். மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சண்முக சிவா பேசுகையில், தமிழக அரசு செயல்படுத்தும் இத்திட்டத்தில், முறையான பயிற்சி வழங்கப்படுகிறது,'' என்றார்.
பயிற்சி நாளை நிறைவு பெறுகிறது. பயிற்சிக்கு பின், சான்றிதழ் வழங்கப்படுகிறது.