/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகராட்சி கவுன்சிலர்களுக்கு சிறப்பு பயிற்சி
/
நகராட்சி கவுன்சிலர்களுக்கு சிறப்பு பயிற்சி
ADDED : ஏப் 21, 2025 09:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை, ; வால்பாறை, தாராபுரம், குன்னுார் நகராட்சி கவுன்சிலர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம், தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனம் சார்பில், கோவை தமிழ்நாடு ஓட்டல் அரங்கில் நடந்தது.
மன்ற உறுப்பினர்களின் பொறுப்புகள், மக்களுக்கான அடிப்படை வசதிகளை, விதிகளுக்கு உட்பட்டு சேர்ப்பது, இதற்கான நிதி ஆதாரத்தை பயன்படுத்துவது, சட்டத்துக்கு உட்பட்டு மனைபிரிவு பிரிக்கப்படுவது, அனுமதி பெறுவது, வீடுகளுக்கு அனுமதி வழங்குவது, நிர்வாகத்தை திறம்பட செயல்படுத்த, உறுப்பினர்கள், பொதுமக்களிடம் நடந்து கொள்ளும் முறை குறித்து விளக்கப்பட்டது.