/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊட்டச்சத்து பொருட்கள் தயாரிக்க கிராம பெண்களுக்கு சிறப்பு பயிற்சி
/
ஊட்டச்சத்து பொருட்கள் தயாரிக்க கிராம பெண்களுக்கு சிறப்பு பயிற்சி
ஊட்டச்சத்து பொருட்கள் தயாரிக்க கிராம பெண்களுக்கு சிறப்பு பயிற்சி
ஊட்டச்சத்து பொருட்கள் தயாரிக்க கிராம பெண்களுக்கு சிறப்பு பயிற்சி
ADDED : நவ 01, 2025 11:31 PM
த மிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம், வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பட்டுப்புழுவியல் துறையில், மல்பெரி பழங்களிலிருந்து ஊட்டச்சத்துப் பொருட்கள் தயாரித்தலில், கிராமப்புற பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடத்தப்பட்டது.
ஜாம், ஸ்குவாஷ், தயார் நிலை பானம், மிட்டாய், பழத்துாள், ஊறுகாய் போன்ற பல்வேறு உயர் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பது குறித்து பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்டன. அன்னுார் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 25க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்திலுள்ள, அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் அமைந்துள்ள, வணிக உணவு பதப்படுத்தும் மையம் மற்றும் வணிகமயமாக்கலுக்கான தொழில்நுட்ப வணிக தயாரிப்பு மையத்தையும், இவர்கள் பார்வையிட்டனர்.
ஐந்து நாட்கள் நடந்த பயிற்சியின் நிறைவு நாளில், மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மையர் நிகார் ரஞ்சன், ''கூடுதல் வருமானம் ஈட்டுவதற்காக மல்பெரி பழப் பொருட்களின் உற்பத்தியை வணிக நிறுவனமாக எடுத்துக் கொள்வதில், பயனாளிகள் முன்வர வேண்டும்,'' என்றார்.
பட்டுப்புழுவியல் துறை பேராசிரியர் முருகேசன், முதன்மை ஆய்வாளர் பிரியதர்ஷினி, இணை முதன்மை ஆய்வாளர் தங்கமலர், கவுசல்யா உட்பட பலர் பங்கேற்றனர்.

