/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர்கள் கற்றல் திறன் அதிகரிக்க சிறப்பு பயிற்சி
/
மாணவர்கள் கற்றல் திறன் அதிகரிக்க சிறப்பு பயிற்சி
ADDED : ஜூலை 31, 2025 09:48 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு நாட்குறிப்பு வழங்கப்பட்டது.
கிணத்துக்கடவு நல்லட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில், 1 முதல் 5 வரை உள்ள மாணவர்கள் அடிப்படை திறன்களை அளவிடுதல் வாயிலாக, கற்றல் கற்பித்தல், வாசிப்பு பழக்கம் மற்றும் கணித அடிப்படை திறன் பயிற்சி உள்ளிட்டவைகள் வழங்கப்படுகிறது.
மேலும், மாணவர்கள் கூடுதலாக கல்வி திறனை வளர்த்துக்கொள்ள, நெ.10.முத்தூர், 'சிறகுகள் டிரஸ்ட்' வாயிலாக, 130 மாணவர்களுக்கு நாட்குறிப்பு வழங்கப்பட்டது.
இதன் வாயிலாக, மாணவர்கள் பள்ளியில் படிப்பதோடு வீட்டிலும் படிப்பது உறுதி செய்யப்படுகிறது. இதனால் மாணவர்கள் கற்றல் திறன் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர்.