/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சென்னை - போத்தனுார் இடையே சிறப்பு ரயில்கள்; தமிழ் புத்தாண்டு, ஈஸ்டரை முன்னிட்டு அறிவிப்பு
/
சென்னை - போத்தனுார் இடையே சிறப்பு ரயில்கள்; தமிழ் புத்தாண்டு, ஈஸ்டரை முன்னிட்டு அறிவிப்பு
சென்னை - போத்தனுார் இடையே சிறப்பு ரயில்கள்; தமிழ் புத்தாண்டு, ஈஸ்டரை முன்னிட்டு அறிவிப்பு
சென்னை - போத்தனுார் இடையே சிறப்பு ரயில்கள்; தமிழ் புத்தாண்டு, ஈஸ்டரை முன்னிட்டு அறிவிப்பு
ADDED : ஏப் 09, 2025 10:43 PM

கோவை; தமிழ் புத்தாண்டு, ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு போத்தனுார் - சென்னை இடையே, இரு சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
வரும், 14ம் தேதி தமிழ் புத்தாண்டு மற்றும் வரும், 18ம் தேதி புனித வெள்ளி ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன.
தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால், பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இவர்களின் வசதிக்காக, போத்தனுார் - சென்னை இடையே இரு சிறப்பு ரயில்களை, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை சென்ட்ரல் - போத்தனுார்(06027) ரயில், நாளை சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11:50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8:30 மணிக்கு போத்தனுார் வந்தடையும். சிறப்பு ரயில், சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக இயக்கப்படும்.
மறுமார்க்கத்தில், போத்தனுார் - சென்னை சென்ட்ரல்(06028) ரயில் வரும், 14 ம் தேதி போத்தனுாரில் இருந்து இரவு 11:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8:20 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்.
சிறப்பு ரயில்களில், ஏ.சி., மூன்றடுக்கு, படுக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.
தாம்பரம் - போத்தனுார் வாராந்திர சிறப்பு ரயில், தாம்பரம் - போத்தனுார்(06185) வாராந்திர சிறப்பு ரயில், வரும், 11 முதல், மே 2ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் மாலை 5:05 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7:45 மணிக்கு போத்தனுார் வந்தடையும்.
போத்தனுார் - தாம்பரம்(06186) வாராந்திர சிறப்பு ரயில் வரும், 13 முதல், மே, 4 ம் தேதி வரை போத்தனுாரில் இருந்து இரவு 11:55 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம், 12:15 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
ஏ.சி., இரண்டடுக்கு, மூன்றடுக்கு, படுக்கை வசதி, இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
செங்கல்பட்டு, மேல்மருத்துவத்துார், திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.