/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருவனந்தபுரம் - கயா இடையே சிறப்பு ரயில்கள்
/
திருவனந்தபுரம் - கயா இடையே சிறப்பு ரயில்கள்
ADDED : ஜன 06, 2025 02:45 AM
கோவை; கும்பமேளாவை முன்னிட்டு, திருவனந்தபுரம் - கயா இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
உ.பி.,யில் கும்பமேளா வரும், 13 முதல் பிப்., 26 வரை நடக்க உள்ளது. இதை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக, சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம், தொடர்ந்து அறிவித்து வருகிறது.
இந்நிலையில், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக, திருவனந்தபுரம் - கயா இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருவனந்தபுரம் வடக்கு - கயா(06021) சிறப்பு ரயில், நாளை, 21, பிப்., 4 ம் தேதிகளில், செவ்வாய் மதியம், 2:00 மணிக்கு திருவனந்தபுரத்தில் புறப்பட்டு, கயாவுக்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவு, 1:30 மணிக்கு சென்றடையும்.
மறுமார்க்கத்தில், கயா - திருவனந்தபுரம் வடக்கு(06022) சிறப்பு ரயில் வரும், 10, 24 மற்றும் பிப்., 7 ம் தேதிகளில், வெள்ளிக்கிழமைகளில் இரவு, 11:55 மணிக்கு கயாவில் புறப்பட்டு திங்கள் காலை, 10:15 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.