/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போத்தனுாரில் இருந்து சிறப்பு ரயில்கள்
/
போத்தனுாரில் இருந்து சிறப்பு ரயில்கள்
ADDED : அக் 16, 2025 05:45 AM
கோவை: தீபாவளியை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் - போத்தனுார் இடையே, மேலும் ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை சென்ட்ரல் - போத்தனுார் (06049) சிறப்பு ரயில், நாளை மற்றும் நாளை மறுதினம், சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11:55 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9:30 மணிக்கு போத்தனுார் வந்தடையும்.
போத்தனுார் - சென்னை சென்ட்ரல்(06050) சிறப்பு ரயில், 18 ம் தேதி மதியம் 2:00 மணிக்கு போத்தனுாரில் இருந்து புறப்பட்டு, அன்று இரவு 11:10 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு சென்றடையும்.
சிறப்பு ரயிலில் ஏ.சி., மூன்றடுக்கு, படுக்கை வசதி, பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.
அதேபோல், போத்தனுார் - சென்னை சென்ட்ரல்(06100) சிறப்பு ரயில் வரும், 21ம் தேதி போத்தனுாரில் இருந்து இரவு 11:50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9:30 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்.
சிறப்பு ரயிலில் ஏ.சி., மூன்றடுக்கு, படுக்கை வசதி, பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில், இந்த ரயில் நின்று செல்லும்.