/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லுாரி மாணவியருக்கு ‛கல் ஒலிம்பியாட் 2025' போட்டி
/
கல்லுாரி மாணவியருக்கு ‛கல் ஒலிம்பியாட் 2025' போட்டி
கல்லுாரி மாணவியருக்கு ‛கல் ஒலிம்பியாட் 2025' போட்டி
கல்லுாரி மாணவியருக்கு ‛கல் ஒலிம்பியாட் 2025' போட்டி
ADDED : அக் 16, 2025 05:45 AM
கோவை: பாரம்பரிய கல் விளையாட்டை மீண்டும் பிரபலப்படுத்த, கல்லுாரி மாணவியர் மட்டும் பங்கேற்கும் வகையில், ‛கல் ஒலிம்பியாட் 2025' மாநில அளவில் நடத்தப்பட உள்ளது.
நம் பாரம்பரிய விளையாட்டுகளான, கண்ணாமூச்சி, பல்லாங்குழி, கபடி, தாயம், ஆடுபுலி ஆட்டம், கிட்டிப்புல், உறியடி, தட்டாங்கல் ஆகியவை, உடல் ஆரோக்கியம் மற்றும் மன ரீதியான செயல்பாடுகளுக்கு உதவுகின்றன. காலப்போக்கில் இவை காணாமல் போயின.
இதில், கல் விளையாட்டு, பெண்களின் விருப்ப விளையாட்டாக இருந்தது. இதுபோன்ற விளையாட்டுகளால் புத்தி கூர்மை, சிந்திக்கும் திறன், மன உறுதி போன்றவை அதிகரித்தன.
மொபைல் போன் பயன்பாடுகளாலும், நவீன தொழில்நுட்பக் கருவிகளாலும், உடலுக்கு போதிய வேலை கொடுக்காமல், ஆரோக்கியம் கேள்விக்குறியாக உள்ளது.
பாரம்பரிய விளையாட்டுகளை மீட்கும் ஒரு நடவடிக்கையாக, கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும், ‛அச்சீவர்ஸ் கிளப் இந்தியா' சார்பில், கல்லுாரி மாணவியர் மட்டும் பங்கேற்கும் வகையில், ‛கல் ஒலிம்பியாட் 2025' நடத்தப்பட உள்ளது.
முதற்கட்டமாக, கோவையில் உள்ள மகளிர் கல்லுாரிகளில் துவங்கப்பட உள்ளது. கற்களை மேலே வீசி ஒவ்வொன்றாக பிடித்து, கையில் உள்ள கற்களையும் கீழே விடாமல் இருக்கச் செய்வது தான் கல் விளையாட்டு.
சரியாக ஐந்து கற்களை பிடித்து விட்டால், ஒரு செட்டுக்கு ஐந்து பாயின்ட் வழங்கப்படுகிறது. இதில் தேர்வு செய்யப்படும் மாணவியர், மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர்.
அடுத்த கட்டமாக, மாநில அளவில் பங்கேற்கும் மாணவியர் வெற்றி பெற்றால், முதல் பரிசாக, 50 ஆயிரம், இரண்டாம் பரிசாக 25 ஆயிரம், மூன்றாம் பரிசாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.
‛‛பாரம்பரியத்தை மீட்டெடுக்க, இது சரியான நடவடிக்கையாக இருக்கும்; ஆண்டுதோறும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என, ‛அச்சீவர்ஸ் கிளப் இந்தியா' தலைவர் லட்சுமி காந்தன் தெரிவித்தார்.
கற்களை மேலே வீசி ஒவ்வொன்றாக பிடித்து, கையில் உள்ள கற்களையும் கீழே விடாமல் இருக்கச் செய்வது தான் கல் விளையாட்டு. சரியாக ஐந்து கற்களை பிடித்து விட்டால், ஒரு செட்டுக்கு ஐந்து பாயின்ட் வழங்கப்படுகிறது.