sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

போத்தனுார் வழியாக சிறப்பு ரயில்கள் தீபாவளி பண்டிகைக்கு அறிவிப்பு

/

போத்தனுார் வழியாக சிறப்பு ரயில்கள் தீபாவளி பண்டிகைக்கு அறிவிப்பு

போத்தனுார் வழியாக சிறப்பு ரயில்கள் தீபாவளி பண்டிகைக்கு அறிவிப்பு

போத்தனுார் வழியாக சிறப்பு ரயில்கள் தீபாவளி பண்டிகைக்கு அறிவிப்பு


ADDED : அக் 12, 2025 12:31 AM

Google News

ADDED : அக் 12, 2025 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போத்தனுார் - சென்னை, சென்னை - மங்களூரு, திருவனந்தபுரம் - சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சிறப்பு ரயில்-1 போத்தனுார் - சென்னை சென்ட்ரல்(06044) சிறப்பு ரயில், 19ம் தேதி இரவு 11.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்.

சென்னை சென்ட்ரல் - போத்தனுார்(06043) சிறப்பு ரயில், 22ம் தேதி மதியம் 12.15 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, அன்றிரவு 10 மணிக்கு போத்தனுார் வந்தடையும்.

சிறப்பு ரயிலில் ஏ.சி., மூன்றடுக்கு, மூன்றடுக்கு(எக்கானமி), படுக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.

சிறப்பு ரயில்-2 சென்னை சென்ட்ரல் - மங்களூரு(06001) சிறப்பு ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து, 20ம் தேதி மதியம் 12.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8 மணிக்கு மங்களூரு சென்றடையும்.

மங்களூரு - சென்னை சென்ட்ரல்(06002) சிறப்பு ரயில், மங்களூருவில் இருந்து, 21ம் தேதி மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்.

சிறப்பு ரயிலில் ஏ.சி., மூன்றடுக்கு, மூன்றடுக்கு(எக்கானமி), படுக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார், பாலக்காடு, சொரனுார், திரூர், கோழிக்கோடு, மாஹி, தலசேரி, கண்ணுார், காசர்கோடு ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.

சிறப்பு ரயில்-3 திருவனந்தபுரம் வடக்கு - சென்னை எழும்பூர்(06108) சிறப்பு ரயில், திருவனந்தபுரம் வடக்கில் இருந்து, 21ம் தேதி மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.

சென்னை எழும்பூர் - திருவனந்தபுரம் வடக்கு(06107) சிறப்பு ரயில் சென்னை எழும்பூரில் இருந்து, 22ம் தேதி மதியம் 1.25 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு சென்றடையும்.

ஏ.சி., மூன்றடுக்கு, படுக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். வர்காலா, கொல்லம், காயாம்குளம், மாவேலிகரா, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், பாலக்காடு, போத்தனுார், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும். இன்று முதல் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us