/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தை அமாவாசை சிறப்பு வழிபாடு; முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம்
/
தை அமாவாசை சிறப்பு வழிபாடு; முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம்
தை அமாவாசை சிறப்பு வழிபாடு; முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம்
தை அமாவாசை சிறப்பு வழிபாடு; முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம்
ADDED : ஜன 30, 2025 07:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; தை அமாவாசையான நேற்று, நீர் நிலைகளில் திதி தர்ப்பணம் செய்து, முன்னோர்களை மக்கள் வழிபட்டனர்.
ஆறு, குளம், ஏரி, குட்டைகளில் முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளைப் படைத்தும், திதி, தர்ப்பணம் கொடுத்தும் ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கியும், வழிபாடுகளை மேற்கொண்டனர்.
வழிபாட்டுக்கு பின்பு, கருப்பு உளுந்து, கருப்பு எள், வெல்லம், உப்பு, ஆடைகள் போன்றவற்றை ஏழை எளியோருக்கு தானம் அளித்தனர். தை அமாவாசையையொட்டி, கோவையிலுள்ள சிவாலயங்கள், பெருமாள் மற்றும் அம்மன் கோவில்களில், சிறப்பு வழிபாடுகள் நடந்தன. திரளான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.