/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தபால் தலை கண்காட்சியில் 'கண்கொள்ளா காட்சி' ; போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு
/
தபால் தலை கண்காட்சியில் 'கண்கொள்ளா காட்சி' ; போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு
தபால் தலை கண்காட்சியில் 'கண்கொள்ளா காட்சி' ; போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு
தபால் தலை கண்காட்சியில் 'கண்கொள்ளா காட்சி' ; போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு
ADDED : நவ 14, 2024 09:17 PM

கோவை ; கோவை மாவட்ட அளவிலான 'கோவை பெக்ஸ் 2024' தபால் தலை சேகரிப்பு கண்காட்சியின் இறுதி நாளில், 2,000த்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், பொதுமக்கள் திரளாக பங்கேற்று பார்வையிட்டனர்.
பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கடிதம் எழுதும் போட்டியில், ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் கீர்த்தனா, கீர்த்திமான் மெட்ரிக் பள்ளியின் தர்ஷினி, ஹிமாகுலேட் ஹார்ட் ஆப் மேரி பள்ளியின் வர்ஷிகா வெற்றி பெற்றனர்.
ஓவியம் வரைதலில், ராம்நகர் சபர்பன் மெட்ரிக் பள்ளியின் தீக்ஷா, எஸ்.எஸ்.வி.எம்., ஸ்கூல் ஆப் எக்ஸலன்சை சேர்ந்த தீக்ஷா ஸ்ரீவத்ஸ், லிசிக்ஸ் மெட்ரிக்., பள்ளியின் அனுகிரகா வெற்றி பெற்றனர்.
வினாடி வினாவில், அச்சனுார், பாரதிய வித்யா பவன் பள்ளியின் தன்யாஸ்ரீ, யுதிகா சுந்திரி, ஜனுஷியா, ராம்நகர் சபர்பன் பள்ளியின் லலித்குமார், ஸ்ரீ அனிருத் கிருஷ்ணமூர்த்தி, லோகேஷ், வெள்ளக்கிணறு வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளியின் சஷ்வதன், திமோதி, அகத்தியன் செல்வமுருகன் ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு, கதிர் கல்விக்குழும தலைவர் கதிர், பரிசு வழங்கினார்.
மாலையில் நடந்த விழாவில், ஆர்.எம்.எஸ்., கோவை கோட்ட கண்காணிப்பாளர் ஜெயராஜ் பாபு வரவேற்றார். நீலகிரி வரையாறு புகைப்பட தபால் அட்டையை, தபால் துறையின் கோவை மண்டல இயக்குனர் அகில் நாயர் வெளியிட, நீலகிரி வரையாடு திட்ட இயக்குனர் கணேசன் பெற்றுக் கொண்டார். பள்ளி மாணவர்கள் வரைந்த மயில் புகைப்பட தபால் அட்டை வெளியிடப்பட்டது.
அரிய அஞ்சல் தலையை காட்சிப்படுத்தியிருந்தவர்களில் மூவருக்கு தங்கம், 10 பேருக்கு வெள்ளி, 11 பேருக்கு வெண்கலம் பரிசு வழங்கப்பட்டது. கோவை கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சிவசங்கர் நன்றி கூறினார்.