/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கனவுகள் மெய்ப்படும் வரை காத்திருப்போம் நுால் வெளியீட்டு விழாவில் பேச்சு

ADDED : ஏப் 14, 2025 05:44 AM

கோவை : கோவை வசந்தவாசல் கவிமன்றம் சார்பில் நுால் வெளியீட்டு விழா, வைஷ்ணவ் காம்ப்ளக்ஸ் அரங்கில் நேற்று நடந்தது. கவிஞர் சண்முகம் தலைமை வகித்தார். கவிஞர் கிருத்திகா எழுதிய 'மாற்றமே முனனேற்றம்' என்ற கவிதை நுால் வெளியிடப்பட்டது. நுாலை, ஒண்டிப்புதுார் அரசு பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் சுப்புலட்சுமி வெளியிட்டார்.
நுால் குறித்து, அரசு கலைக்கல்லுாரி உதவி பேராசிரியர் ஆனந்தி பேசுகையில், ''இந்த சமூகத்தில் மாற்றம் ஏற்பட்டால்தான் முன்னேற்றம் ஏற்படும் என்பதை கவிதைகள் வழியாக, இந்த கவிஞர் வலியுறுத்துகிறார். இங்கு எல்லா மாற்றங்களும் நிகழ்ந்து விட வாய்ப்பு உள்ளது. ஆனால் மது இல்லாத தமிழகமாக மாற வாய்ப்பு இல்லை. நம் கனவுகள் மெய்ப்படும் வரை காத்திருப்போம்.இவ்வாறு, அவர் பேசினார்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கவிஞர்கள் சுந்தரராமன், பிரசாத், தன்மானம், அன்புசிவா, புதியவன் உள்ளிட்ட கவிஞர்கள் கவிதை வாசித்தனர்.