/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர்களுக்கு 26,28ல் பேச்சு போட்டி
/
மாணவர்களுக்கு 26,28ல் பேச்சு போட்டி
ADDED : ஆக 21, 2025 09:32 PM
கோவை; தமிழ் வளர்ச்சி துறை சார்பில்செப். 15 ல் அண்ணாதுரை பிறந்தநாள், 17ல் ஈ.வெ.ரா பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, கோவை பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு ஆக. 26, 28 தேதிகளில் ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் பேச்சு போட்டி நடக்கிறது.
கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000, இரண்டாம் பரிசாக ரூ.3,000, மூன்றாம் பரிசாக ரூ.2, 000 வழங்கப்படும். அரசு பள்ளி மாணவர்கள் இரண்டு பேரை தேர்வு செய்து சிறப்பு பரிசு ரூ.2,000 -வீதம் வழங்கப்படும்.
தலைமை ஆசிரியர்கள், கல்லுாரி முதல்வர்கள் முதல் சுற்று போட்டிகளை நடத்தி மாணவர்களை தேர்வு செய்து, tamilvalar.cbe@gmail.com என்ற முகவரிக்கு 25ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.