/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேச்சுப் போட்டி; சச்சிதானந்த பள்ளி தேர்வு
/
பேச்சுப் போட்டி; சச்சிதானந்த பள்ளி தேர்வு
ADDED : ஆக 26, 2025 10:27 PM

மேட்டுப்பாளையம்; மாநில அளவிலான இறுதிச் சுற்று பேச்சு போட்டிக்கு, கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி, எட்டாவது முறையாக தகுதி பெற்றுள்ளது.
ஸ்ரீராம் இலக்கிய கழகம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் பேச்சுப் போட்டி, கோவை சபர்பன் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
மேல்நிலைப் பிரிவில் மேட்டுப்பாளையம் கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில், பதினொன்றாம் வகுப்பு மாணவர் பிரகலாதன் குமாரசாமி முதலிடம் பெற்றார். இதே பிரிவில் மாணவி குழலினியாள், மாணவர் சஸ்வந்த் பாலாஜி ஆகியோர் ஊக்கப் பரிசினை பெற்றனர்.
இடைநிலை பிரிவில் இதே பள்ளியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவர் தீபக் சூர்யா இரண்டாம் இடம் பெற்றார். இதே பிரிவில் மாணவர் விணீஸ், மாணவி பூர்ண ரித்திகா ஆகியோர் ஊக்க பரிசு பெற்றனர். பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்ற பிரகலாதன் குமாரசாமி சென்னையில் நடைபெற உள்ள, மாநில அளவிலான இறுதி போட்டிக்கு, தகுதி பெற்று சாதனை படைத்துள்ளார்.
இப்பள்ளி இறுதிப் போட்டிக்கு எட்டாவது முறையாக தகுதி பெற்றுள்ளது. அத்துடன் ஐந்து முறை மாநில அளவில் முதல் பரிசு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு காட்டூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அய்யாசாமி கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி நிர்வாக அறங்காவலர் ராமசாமி, செயலர் கவிதாசன், பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல் மற்றும் டாக்டர் சீலா கிரேஸ், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.