/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலை விபத்தை தவிர்க்க வேகத்தடைகள் சீரமைப்பு
/
சாலை விபத்தை தவிர்க்க வேகத்தடைகள் சீரமைப்பு
ADDED : செப் 02, 2025 08:47 PM

சூலுார்; சுல்தான்பேட்டை காம நாயக்கன்பாளையம் ரோட்டில், விபத்துக்குப்பின் நெடுஞ்சாலைத்துறையினர், வேகத்டையை சீரமைக்கும் பணியில் ஈடு பட்டனர்.
பல்லடம் - பொள்ளாச்சி ரோடு விரிவாக்கம் செய்யும் பணி நடந்தது. அப்போது, சுல்தான்பேட்டை - காம நாயக்கன் பாளையம் இடையே உள்ள, இரண்டரை கி.மீ. தூரத்துக்குள், 21 இடங்களில் 'ரம்பிள் ஸ்டிரிப்' வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. இந்த வேகத்தடைகளால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வந்தனர். வேகத்தடைகளை அகற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், இரு நாட்களுக்கு முன் நடந்த விபத்தில், லாரி கடைக்குள் புகுந்தது. இதில், கார், லாரி உருக்குலைந்தது. மூதாட்டியும், லாரி டிரைவரும் படு காயமடைந்தனர். இதையடுத்து, அப்பகுதி மக்கள் மறியல் செய்தனர்.
விபத்துக்குப்பின் விழித்துக்கொண்ட நெடுஞ்சாலைத்துறையினர் அனைத்து இடங்களிலும் உள்ள வேகத்தடைகளுக்கு இடையில் உள்ள தாழ்வான பகுதிகளில் தார் கலவை ஊற்றி சமன் படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.