/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முக்கிய சந்திப்புகளில் வேகத்தடை; வாகன ஓட்டுநர்கள் எதிர்பார்ப்பு
/
முக்கிய சந்திப்புகளில் வேகத்தடை; வாகன ஓட்டுநர்கள் எதிர்பார்ப்பு
முக்கிய சந்திப்புகளில் வேகத்தடை; வாகன ஓட்டுநர்கள் எதிர்பார்ப்பு
முக்கிய சந்திப்புகளில் வேகத்தடை; வாகன ஓட்டுநர்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 17, 2025 10:08 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகரில், குறுகலான ரோடு, முக்கிய சாலை சந்திப்புகளில் வேகத்தடை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி நகர ரோடுகளில், போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் மற்றும் கண்காணிப்பு பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய ரோடுகள், சிக்னல்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இருப்பினும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களால், நெரிசல் தவிர்க்க முடியாத நிலை உள்ளது. அதேபோல, குறுகலான ரோடு, சாலை சந்திப்புகளில் வேகமாக இயக்கப்படும் வாகனங்களால் விபத்து அபாயமும் உள்ளது. இந்நிலையில், முக்கிய சாலை சந்திப்புகளில், வேகத்தடை அமைக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது:
வாகனம் ஓட்டும் பலர், போக்குவரத்து விதியை முழுமையாக தெரியாமலும், தெரிந்தவர்கள் பின்பற்றும் எண்ணம் இல்லாமலும் செயல்படுகின்றனர். நகர எல்லைக்குள் வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு இருப்பதில்லை.
அதிவேக வாகனங்கள், பல சமயங்களில் விபத்துகளுக்கு வழி வகுக்கிறது. மகாலிங்கபுரம், நியூ ஸ்கீம் ரோடு, தெப்பக்குளம் வீதி உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் உள்ள சாலை சந்திப்புகளில் வேகத்தடை அமைத்து, வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.