/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதுகுத்தண்டுவட அறுவை சிகிச்சை பயிற்சி
/
முதுகுத்தண்டுவட அறுவை சிகிச்சை பயிற்சி
ADDED : பிப் 15, 2024 06:46 AM
கோவை : கே.எம்.சி.எச்., மற்றும் மருத்துவ கல்லுாரி சார்பில், இளம் நரம்பியல் மருத்துவர்களுக்கான முதுகுத்தண்டுவட அறுவை சிகிச்சை குறித்த, இரண்டு நாள் பயிற்சி மருத்துவமனையில் நடந்தது.
இந்திய நரம்பியல் கழகத்தின் மருத்துவக் கல்வி வாரியம் சார்பில், நடந்த பயிற்சி வகுப்பை கே.எம்.சி.எச்., குழுமத்தின் தலைவர் நல்லா ஜி பழனிசாமி துவக்கிவைத்தார்.
முதுகுத்தண்டு டிஸ்க் விலகுதல், தண்டுவட எலும்புமுறிவு, முதுகெலும்பு கட்டி போன்ற பொதுவாக முதுகுத்தண்டுவடத்தில் காணப்படும் பிரச்னைகளுக்கு, சிகிச்சை அளிக்க நிபுணர்கள் தேவைப்படுகின்றனர்.
இதற்கு, பெங்களூரை சேர்ந்த டாக்டர் கோமல் பிரசாத், திருவனந்தபுரத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார், வேலுாரை சேர்ந்த டாக்டர் விவேக் ஜோசப், கோட்டயத்தை சேர்ந்த டாக்டர் வினு கோபால், மும்பையை சேர்ந்த டாக்டர் ஜெயேஷ் சர்தரா ஆகிய மருத்துவர்கள் பயிற்சி அளித்தனர்.
இதில், கே.எம்.சி.எச்., செயல் இயக்குனர் அருண், இந்திய நரம்பியல் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் வினு கோபால் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட, இளம் மருத்துவர்கள் பங்கேற்றனர்.

