/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாரியம்மன் கோவிலில் ஆன்மிக திருவிழா
/
மாரியம்மன் கோவிலில் ஆன்மிக திருவிழா
ADDED : ஜன 07, 2025 02:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி ;பொள்ளாச்சி கடைவீதி மாரியம்மன், அங்காளம்மன் கோவிலில், மார்கழி மாதத்தை முன்னிட்டு, தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.மேலும், மாலை நேரத்தில் ஆன்மிக திருவிழா நடைபெறுகிறது. தினமும் ஒவ்வொரு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
மாலை, 6:30 மணி முதல், இரவு, 8:00 மணி வரை தினமும் ஒரு தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக, பரத நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது. வரும், 13ம் தேதி வரை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

