/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராமகிருஷ்ணா வித்யாலயாவில் விளையாட்டுப் போட்டி
/
ராமகிருஷ்ணா வித்யாலயாவில் விளையாட்டுப் போட்டி
ADDED : செப் 03, 2025 11:13 PM
பெ.நா.பாளையம்; மேஜர் தியான் சந்தின் பிறந்த நாளையொட்டி, தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, வித்யாலயா கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள், ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா மாருதி உடற்கல்வியியல் கல்லுாரி மைதானத்தில் நடந்தன.
வாலிபால், கபடி, கோகோ உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் திரளான மாணவ, மாணவியர், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். பரிசளிப்பு விழாவில், மாருதி உடற்கல்வியியல் கல்லுாரி முதல்வர் ஜெயபால் வரவேற்றார்.
உதவி பேராசிரியர் செந்தில்குமார் அறிக்கை வாசித்தார். ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா துணை செயலாளர் சுவாமி தத்பாஷானந்தா வாழ்த்தி பேசினார்.
வித்யாலயா செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தர், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். ராமகிருஷ்ண மிஷன் விவேகானந்தா கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மையர் கிரிதரன் நன்றி கூறினார்.