/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுத்தையை கண்டு மாணவன் மயக்கம்
/
சிறுத்தையை கண்டு மாணவன் மயக்கம்
ADDED : செப் 03, 2025 11:11 PM
வால்பாறை; வால்பாறை, சோலையாறு அருகே வீட்டின் அருகே சிறுத்தையை கண்ட பள்ளி மாணவர் மயங்கி விழுந்தார்.
வால்பாறை அடுத்துள்ளது சோலையாறு எஸ்டேட் முதல் பிரிவு எஸ்டேட். இங்கு தொழிலாளர்களாக வேலை செய்யும் பாலன்- - சுதா தம்பதியரின் மகன் ஹரிசுதன்,16. இவர், வால்பாறை பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.
இந்நிலையில், பள்ளி முடிந்து நேற்று மாலை ஹரிசுதன் வீடு திரும்பினார். வீட்டினுள் சிறிது நேரம் இருந்த சிறுவன், முன் பக்க கதவை திறந்த போது வாசலில் சிறுத்தை நிற்பதை கண்டதும் மயக்கமடைந்தார்.
அங்கிருந்தவர்கள் சப்மிட்டதும் சிறுத்தை ஓட்டம் பிடித்ததும். இதையடுத்து, மயங்கிய சிறுவனை வால்பாறை அரசு மருத்துவமனையில் பெற்றோர் அனுமதித்தனர். இதுகுறித்து, வனத்துறை மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.