/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுவர், சிறுமிகளுக்கு விளையாட்டு போட்டி
/
சிறுவர், சிறுமிகளுக்கு விளையாட்டு போட்டி
ADDED : பிப் 13, 2024 12:00 AM
மேட்டுப்பாளையம்;காரமடை அருகே உள்ள, எஸ்.வி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.
இதில் எல்.கே.ஜி., முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும், சிறுவர், சிறுமிகளுக்கு ஓட்டப்பந்தயம், பந்து எறிதல், வேடிக்கை விளையாட்டுகள், நின்று தாண்டுதல் உள்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.
இதில், காரமடை, மேட்டுப்பாளையம் சுற்றியுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து, 500க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் பங்கேற்று, தங்கள் விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தினர். இந்த விளையாட்டு போட்டிகள் துவக்க நிகழ்ச்சிக்கு, பள்ளி தாளாளர் பழனிசாமி தலைமை வகித்து, போட்டிகளை துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் சசிகலா, அறங்காவலர் ராஜேந்திரன், தாரகேஸ்வரி, நிர்வாக அலுவலர் சிவ சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.