/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூடைப்பந்து முதல் தடகளம் வரை விளையாட்டுப் போட்டிகள்; வரும் மாதம் தொடக்கம்

ADDED : ஜூன் 27, 2025 11:24 PM
கோவை; கோவை பள்ளிக்கல்வித்துறை சார்பில், 2025-2026 கல்வியாண்டில், மாணவர்களுக்கான குடியரசு தின மற்றும் பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
அரசு, அரசு உதவி பெறும், மாநகராட்சி மற்றும் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் இப்போட்டிகள், கோவை வருவாய் மாவட்டத்திலும் அதன் கீழுள்ள குறு மையங்களிலும் நடைபெறவுள்ளன. இதற்காக, தமையமையாசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்கள் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவை கல்வி மாவட்டத்தில், 10 மண்டலங்கள் மற்றும் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 4 மண்டலங்கள் என மொத்தம் 14 மண்டலங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதனை முன்னிட்டு, நிகழ்குறிப்பு கூட்டங்கள் ஜூலை 11 மற்றும் 14ம் தேதிகளில் நடைபெறும்.
மாவட்ட உடற்பயிற்சி ஆய்வாளர் குமரேசன் கூறுகையில், “கூடைப்பந்து, கோ-கோ, கபடி, த்ரோபால், ஹேண்ட்பால், தடகளம் உள்ளிட்ட 14 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. பள்ளிகளில் இருந்து அணிகளைத் தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. போட்டிகள் நடைபெறும் தேதிகள் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. மண்டல அளவில் வெற்றி பெறும் அணிகள், மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு தகுதி பெறுவர்,” என்றார்.