/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அக்சரா அகாடமி பள்ளியில் விளையாட்டு தின விழா
/
அக்சரா அகாடமி பள்ளியில் விளையாட்டு தின விழா
ADDED : நவ 14, 2024 09:15 PM

கோவை; தடாகம் ரோட்டில் உள்ள அக்சரா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் விளையாட்டு தின விழா நடந்தது.
இதில், மாணவர்கள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. தடகளம் மற்றும் பல்வேறு போட்டிகளில் சிறப்பாக விளையாடிய மாணவி அதர்வா ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டினார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஒலிம்பியன் ஜின்சி பிலிப் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற துணை கமாண்டன்ட் (சி.ஆர்.பி.எப்.,) தியான் சந்த் பரிசுகள் வழங்கினார்.
விளையாட்டு தினத்துடன் இப்பயிற்சியை நிறுத்தி விடாமல், தொடர்ந்து பயிற்சிபெற வேண்டும் என, தியான் சந்த் வலியுறுத்தினார். பள்ளி நிறுவனர் கிரீசன், செயலாளர் ஹனி, நிறுவனர் தலைவர் சேகர், அறங்காவலர் பிரட்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.